நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கலந்தாய்வு கூடுகை !

0
84
nazareth news

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி யில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கலந்தாய்வு கூடுகை 29.02.2020 சனிக்கிழமை அன்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூடுகைக்கு தொடக்கமாக கல்லூரி பாடகர் குழுவினர் துதிப்பாடல் பாடினார்கள். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர். பிராங் மெரின் ஆரம்ப ஜெபம் செய்தார். கணிதத் துறைத் தலைவர் முனைவர். ஜெயபாலன் கென்னடி வேதபாடம் வாசித்தார். துணை முதல்வர் முனைவர். பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பொருளியல் துறை பேராசிரியர் முனைவர். இராஜகுமார் தொடக்க உரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் கழக உபதலைவர் பால்கர்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் தேவசகாயம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

மாணவர்கள் ஒழுக்கமாக இருந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய காரணமாக இருக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்க்க திறம்பட கல்வி கற்று, சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் முனைவர். அருள்ராஜ் பொன்னுதுரை தலைமையுரை நிகழ்த்தினார்.

நிதிக்காப்பாளர் முனைவர். குளோரியம் அருள்ராஜ் நன்றி கூறினார். பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு ரொக்கப் பணம், சான்றிதழ் மற்றும் ஷீல்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை தமிழ்த் துறைத் தலைவர் முனைவர். அந்தோணி செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். கல்லூரிச் செயலர் எஸ்.டி.கே. ராஜன் ஆலோசனையின் படி கல்லூரி முதல்வர் முனைவர் அருள்ராஜ் பொன்னுதுரை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், அலுவலர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here