தன்நிலை மறந்து ஆட்டம் போட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.!

0
25

கடந்த சில காலமாக அ.தி.மு.க, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரட்டைத் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில் எதிர்கட்சியாக இருந்து அரசியல் செய்ய வேண்டிய கட்டயாய நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதில் பாஜக முனைப்பு காட்டியது. அதனால் அதிமுக அந்த இடத்தில் இல்லையோ என்று கேள்வி எழுந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கை பா.ஜ.கவை எதிர்கட்சி அந்தஸ்திற்கு உயர்த்தியது. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சல சலப்பு ஏற்பட்டது. வலுவான எதிர்கட்சியாக அதிமுக தலைமை செயல்பட வேண்டும் என்று அக்கட்சியினர் ஆங்காங்கே பேச ஆரம்பித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இரட்டை தலைமை இருப்பதால் அதிரடி முடிவு எடுக்க முடியவில்லை. எனவே ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கட்சிக்குள் பேசப்பட்டது. அதன் விளைவாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலிடத்திற்கு வர முயற்சியில் ஈடுபட்டனர். உஷாராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டி தன்னை தலைமை பொறுப்புக்கு கொண்டுவர சகல முயற்சியிலும் ஈடுபட்டார். அதனை தடுக்கும் விதமாக எடப்பாடியின் நடவடிக்கைக்கு எதிராக பன்னீர்செல்வம் நீதிமன்றம் வரை சென்றார்.

நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமியின் புதிய முயற்சிக்கு தடைவிதிக்கும் விதமாக கடந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு எடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பின் முயற்சிக்கு தடைவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என்பதுதான் கணக்கு. அதேவேளை, அடுத்த கட்ட முயற்சிகளை தனி ஆணையர் மூலம் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. புதிய முயற்சி எடுக்கும் போது நியமிக்கப்படும் ஆணையர் மத்தியஸ்தம் செய்வார் அவ்வளவுதான்.

இந்த உத்தரவு வெளியானதும் எதோ ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே கட்சியின் முக்கிய பொறுப்பிற்கு வந்துவிட்டது போலவும், எடப்பாடி பழனிசாமி எதுவுமே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டார் என்பதுபோலவும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஓ.பி.எஸும், ஈ.பி.எஸும் இணைந்து பணியாற்றும் சூழ்நிலை வந்தால் இணக்க மாக செல்ல வேண்டுமே என்பதை மறந்து, எடப்பாடியை கடுமையாக வசைபாடி தீர்த்துவிட்டது ஓ.பி.எஸ் தரப்பு. எடப்பாடி தோற்றுவிட்டார் என்பது மட்டும்தான் அவர்கள் எண்ணத்தில் இருக்கிறது தவிர, தனி ஆணையர் மூலம் பொதுக்குழு நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் யார் வெற்றி பெற முடியும்? என்பது பற்றியோ, பிரிந்து செல்பவர்கள் மீண்டும் இணைந்தே இருக்க வாய்ப்பு இருக்கிறது அப்படியானால் அவர்களுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்பது குறித்தோ யோசிக்கவில்லை. இத்தனை விமர்சனத்துக்கு பிறகு இருவரும் அருகருகே இருந்து பணியாற்ற வேண்டிய நிலை வந்தால் அது எப்படி இருக்கும் என்பதை துளியும் யோசிக்கவில்லை.

எங்கள் கட்சி தோழர்கள் சிறிது காலம் தவறான வழியில் சென்றுவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அனைவரும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொன்னால், ஒரு சமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒத்துக் கொண்டு இணைந்திருக்கும். இவர்கள் போட்ட ஆட்டத்தால் மேல்முறையீடு செய்யப்படும் என்று எடப்பாடி தரப்பு தகவல் சொல்லிவிட்டது.

இத்தனைக்கும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகத்தான் நிகழ்வுகள் உணர்த்தியிருக்கிறது. அப்படி இருக்கும் போது ஓ.பி.எஸ் தரப்பு சற்று நிதானம் கொண்டிருக்கலாம். பட்டாசு வெடித்து கொண்டாடி மேலும் மேலும் விரிசலை அதிகப்படுத்திவிட்டனர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் பல ஆறுதலான நடுநிலையானது. ஆனால் அவரின் ஆதரவாளர்கள் போட்ட ஆட்டம் தவறாது. தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமியின் முயற்சிகள் தடுக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, அவரும் மேல் முறையீடு செல்லப்போகிறார். அடுத்து என்ன உத்தரவு வரப்போகிறதோ தெரியவில்லை. அதற்கு பிறகுதான் எந்தமாதிரியான முடிவிற்கும் வரமுடியும்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here