ஓ.பி.எஸ் அழைப்பை நிராகரித்தார் ஈ.பி.எஸ் !

0
19

அதிமுகவில் ஈ.பி.எஸ்க்கும், ஓ.பி.எஸ்க்கும் இடையே மல் யுத்தம் நடந்து வருகிறது. பொதுக்குழு மூலம் கட்சி நிர்வாகம் ஈபிஎஸ் பக்கம் சென்றது.

ஆனால் அது செல்லாது என்கிற நீதிமன்ற உத்தரவை வாங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். இரண்டுபேரையும் பழைய ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் பதவி காலத்திற்கே கொண்டு விட்டுவிட்டது நீதிமன்றம். இதை ஓபிஎஸ் தரப்பு ஆதரிக்கிறது. ஈபிஎஸ் தரப்பு எதிர்த்து நீதிமன்றம் சென்றுவிட்டது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், பிரிந்தவர்களை அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அவர் விடுத்த அழைப்பில் எடப்பாடி தரப்பு மட்டும் அல்ல, சசிகலா, டிடிவி கூட அடக்கம்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், ’’அவர் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு விடுப்பார், யாரை எதிர்த்து தர்ம யுத்தம் சென்றாரோ அவருக்கும் சேர்த்தே அழைப்பு விடுக்கிறார். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம். செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது. நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன்.

கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன். எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. தொண்டர்கள் பலம் ஓபிஎஸ்-க்கு இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே. அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசப்படுத்தப்பார்க்கிறார்கள். அதனை தடுக்கும் போது தான் பிரச்னைகள் உருவாகுகின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ல் ஒன்றாக இணைந்தோம். ஆனால் இப்போது எப்படி இணைய முடியும்?எந்த அடிப்படையில் இணைப்பு பத்தி பேசுகிறார்?, கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீதி தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர், அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும் ?.

கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான். திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார். அவர் பதவிக்கு வரவேண்டுமென்றால் என்ன வேண்டுமானும் செய்வார்’’ என்றார் சூடாக. ஆக அதிமுகவில் மல்லுகட்டு மிகவிரைவில் முடிவுக்கு வராது போல..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here