”விடுதலைபோராட்ட வீரர் ஒண்டிவீரன் தபால் தலை வெளியீட்டு விழா”

0
26

தமிழகத்தில், அன்னியர் ஆட்சிக்கு எதிராக போராடி,தன் மான உணர்ச்சியையும், வீரத்தையும் விதைத்தவர்களில் முக்கியமானவர் ஒண்டிவீரன்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பொதிகை மலையை தலைமையமாக வைத்து ஆட்சி செய்த சிற்றரசர் சுருளிமுத்து பட்டவராயன்,திருநீலகண்டன் உள்ளிட்டோரின் வழிவந்தவர் ஒண்டிவீரன். தற்போதைய தென் காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம்,நெற்கட்டான் செவல் கிராமத்தில், செல்லையா – கருப்பாயி தம்பதியின் 8வது மகனாக, 1710-ல் பிறந்தவர் ஒண்டிவீரன். இவரது தந்தை அந்த ஊரை ஆட்சி செய்தார்.

ஒண்டிவீரனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முத்துவீரன். நெல்லைச் சீமையை, 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாயக்கர்கள் ஆண்டனர்.பின், அவர்களை வீழ்த்தி, ஆற்காடு நவாபுகள் ஆண்டனர். அவர்களுக்குள் வாரிசுரிமைப்போர் அடிக்கடி நடந்தது. இதை சாதகமாக்கி,1755 முதல், கிழக்கிந்திய கம்பெனி,சிற்றரசர்களிடம் வரிவசூலில் இறங்கியது.

இந்த காலகட்டத்தில்,ஒண்டிவீரன்,பூலித்தேவனின் படைப் பிரிவில் தளபதியாக இருந்தார். இந்தநிலையில், நவாப்களின் வரி வசூல் அதிகாரிகள், ஒண்டிவீரன் குடும்ப சொத்துக்களை, சூழ்ச்சி செய்து பறித்தனர். கடந்த 1755ல், ஆற்காடு நவாப்களின் படையும், கிழக்கிந்திய கம்பெனி படையும், நெற்கட்டான் செவலில் போரிட்டன.

போரில் ஒண்டிவீரன் படை வீரத்துடன் எதிரிகளை விரட்டியடித்தது. இதனால், ஆத்திரமுற்ற கிழக்கிந்திய கம்பெனி படைகள், கங்கைகொண்டான், ஆவார்க்குறிச்சி,நெற்கட்டான் செவல், ஊத்துமலை, சுரண்டை, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி போரிட்டது. அவற்றையும் ஒண்டிவீரன் படை முறியடித்தது.

மேலும், 1770,1771ல், களக்காடு,கங்கைகொண்டான்,ஸ்ரீவில்லிப்புத்தூர்,தென்மலை உள்ளிட்ட இடங்களில் நடந்த போர்களில் கடுமையாக போராடி,பிரிட்டீஷ் படையை துரத்தினார் ஒண்டிவீரன். தன் கையை இழந்த பின்னும் வெற்றியை நிலைநாட்டிய ஒண்டிவீரணை மதித்து போற்றினார், பூலித்தேவன்.அதன் நன்றிக் கடனாக, பூஇலித்தேவன் மறைந்த பின், அவரின் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பையும் ஒண்டி வீரனே ஏற்றார். வீரத்துக்கும் விவேகத்துக்கும் அடையாளமாக விளங்கி, முதல் சுதந்திர தீயை மூட்டிய ஒண்டிவீரன், தன் 61அவது வயதில் 1771, ஆகஸ்ட் 20ல் மறைந்தார். அவரின் 251வது நினைவு நாள் இன்று.

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடியான, ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை வெளியிட,மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்தார். அதன்படி, நெல்லையில், ஒண்டிவீரனின் நினைவு தபால் தலை வெளியிடும் விழா, மத்திய தகவல் ஒலிபரப்புதுறை இணையமைச்சர் முருகன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தபால்தலையை வெளியிட்டார், அதனை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்திரராஜன் பெற்றுக் கொண்டார். இருவரும் சிறப்புரையாற்றினர். மேலும் இந்த விழாவில் திருநெல்வேலி சட்ட மன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here