தூத்துக்குடி மாநகராட்சி வரும் 2023க்குள் புதிய பொலிவுடன் ஜொலிக்கும் – மேயர் ஜெகன் பெரியசாமி நம்பிக்கை

0
13

தூத்துக்குடி,செப்.4:

தூத்துக்குடி மாநகராட்சி வரும் 2023க்குள் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதனை அவ்வப்போது ஆய்வு செய்து மேயர் ஜெகன் பெரியசாமி விரைவுபடுத்தி வருகிறார். அந்த வகையில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் கால்வாய் கட்டும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மழைகாலத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் மழைநீர் தேங்கியிருந்ததை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர், வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் திட்டங்கள் வகுப்பட்டு பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் புதிதாக கால்வாய்கள் அமைக்கப்பட்டு கழிவு நீர், மழைநீர் எளிதில் கடலுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகரில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்க்கும் வாட்சப் எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம் வரும் புகார்கள், குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் நல்ல கட்டமைப்பை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்குவதற்கும் திட்டப்படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தோறும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் பூங்கா, மற்றும் பல்வேறு இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டுள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் சீறிய முயற்சியுடன் மாநகாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 2023க்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளன. மக்கள் சேவையே எங்களது சேவையாக இருக்கும்’’என்றார் மேயர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here