தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஆ.ராசா எம்பி மீது புகார் – பாஜகவினர் அதிரடி

0
14

சாத்தான்குளம், செப். 15:

இந்துக்களை அவதூறாக பேசிய விவகாரத்திற்காக திமுக எம்.பி ஆ.ராசா மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என பாஜகவினர் இன்று(15,9,2022) சாத்தான்குளம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

திமுகவைச் சேர்ந்த நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா இந்துக்களை அவதூறாக விமர்ச்சித்து பேசியதாக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கான கண்டனமும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்துக்களை விமர்ச்சித்த ஆ.ராசா எம்பி மீது வழக்குபதிவு செய்யகோரி தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஆர் . சித்ராங்தகன் தலைமையில் சாத்தான்குளம் நகர பாஜக தலைவர் து. ஜோசப் ஜெபராஜ், சாத்தான்குளம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதில் மாவட்ட பாஜக துணைத் தலைவர் எஸ். செல்வராஜ், மாவட்ட செயலர் ராஜபுனிதா, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் ஏ. மகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றிய வழக்குரைஞர் பிரிவு தலைவர் பொ. முருகானந்தம், ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் ஜெ. ஜெயராஜேஷ், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு துணைத் தலைவர் ரா. ராம்மோகன், நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சபிதாச செல்வராஜ், முன்னாள் பேருராட்சி கவுன்சிலர் து. எட்வர்ட் ராஜதுரை, ஒன்றிய ஊடக பிரிவு தலைவர் வசந்தகுமார், மற்றும் மணிகண்டன், பழனிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here