தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக இருதய செயலிழப்பு ஏற்பட்ட 2 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி

0
23

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று(16.09.2022) இருதய துறையில் முதன் முதலாக சீரற்ற இருதய துடிப்பினால் இருதய செயலிழப்பு ஏற்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி(இருதய முருக்கி) பொருத்தப்பட்டு உயிர் காக்கப்பட்டது.

சீரற்ற இருதய துடிப்பு இருதய துடிப்பு குறைபாடு வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படுவதால் மயக்கம் மற்றும் உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இந்த நிரந்தர பேஸ்மேக்கர் கருவியை பொருத்த அவர்கள் இதுவரை மதுரை,சென்னை,செல்ல வேண்டி இருந்தது தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும் வசதி உள்ளதால் நோயாளிகள் மதுரை,சென்னை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்ய சுமர் மூன்று முதல் நான்கு லட்சம் வரை செலவாகும். ஆனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக இச்சிகிச்சை செயல்படுத்தப்பட்டது. இச்சிகிச்சை தொடர்ந்து இனிமேலும் மருத்துவமனையில் அளிக்கப்படும். மேலும் நமது இருதய தீவிர சிகிச்சையில் மாதத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு உள்நோயாளியாக அனுதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வருகின்றனர்.

கடந்த ஜூன் 2020 முதல் இருதய இரட்த குழாய் நுண் சிகிச்சை ஆய்வு கூடம் இம்மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த அதிநவீன கருவி மூலம் இம்மருத்துவமனை இருதயதுறையில் மாரடைப்பினால் வரும் நோயாளிகளுக்கு இருதய நுண் குழாய் பரிசோதனை செய்யப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டு இருதய இரட்த நாள அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 1300க்கும் மேற்பட்ட மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்ட் மூலம் தக்க நேரத்தில் உயிர்காக்கப்பட்டு பூரண குணமடைதுள்ளனர். மேலும் ஆண்டிற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இதில் சுமார் 70 நோயாளிகளுக்கு தினமும் இருதய செயல்திறன் கண்டறியும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் இருதய மருத்துவர்கள் செவிலியர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாலும் மருத்துவ மனை முதல்வர் கலைவாணி வழிகாட்டுதலின் பேரிலும் உறைவிட மருத்து அலுவலர் சைலஸ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ததேயூஸ், மருத்துவர் குமரன் ஆகியோரின் முயற்சியால் இது சாத்தியமானது.

சிகிச்சை குழுவில் மூத்த இருதய மருத்துவர்கள் டாக்டர்கள் பாலமுருகன், கணேசன், வெங்கடேஷ்,ஆலன், பென்னி,துளசிராம் மற்றும் செவிலியர்கள், டெக்னிசியன்கள் ஆகியோர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here