பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாள் விழா – நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது

0
15

பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று(17.09.2022) நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடினர்.

தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலில்ன் பேரில் இனிப்பு வழங்குவது, ஏழை,எளியோருக்கு நலதிட்டங்கள் வழங்குவது, மரக்கன்றுகள் வழங்குவது,மருத்துவ முகாம்,ரத்ததானமுகாம் மற்றும் பொது இடங்களில் மெகா துப்புரவு பணி மேற்கொள்வது என பாஜகவினர் பரபரப்பாக ஈடுபட்டனர்.

சென்னை திநகரில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் மதுரகவிராயர் எழுதிய, சர்வ தேசத்தின் உயர்ந்த தலைவர் மோடி கவிதை தொகுப்பு புத்தகத்தை, தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன்,மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ், துணை தலைவர் நாச்சிக்குளம் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதி மன்றம் ஆவின் கேட் அருகில் நடந்த நிகழ்ச்சியில், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வணங்காமுடி, மாநில துணைத் தலைவர்கள் செங்குட்டுவன், மாநில செயலாளர்கள் திவாகர், பாஸ்கர் உள்ளிட்டோர், 50 இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட புத்தகம், 150 பெண்களுக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

மேலும், பிரதமர் மோடி நீடூடி வாழ காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் செய்தனர். பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் சென்னை தி.நகர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், மோடி கபடி லீக் போட்டி நடந்தது. கொளத்தூர் மக்காராம் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு 720 கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் மாநில செயலாளர் சதீஷ்குமார் பங்கேற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் கபடி போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 80 அணிகள் கலந்து கொண்டன. தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் மீனாதேவ், சசிகலாபுஷ்பா ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

இதேபோல் தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ சந்தன முத்துமாரியம்மன் கைப்பந்து கழகம் மற்றும் கணேசா கைபந்து கழகம் சார்பில் மின்னொளி கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷாபு கலந்து கொண்டு விளையாட்டு போட்டியினை தொடக்கி வைத்தார். முன்னதாக அங்கு பாஜக விவசாயி அணியின் பால்ராஜ் சார்பில் மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பால்ராஜ்,பாலமுருகன்,ஆனந்தபிரகாஷ்,மாரிமுத்து,ஆனந்த் உள்பட பலர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here