”சாயர்புரம் மகளிர் பள்ளி மாணவிகளுக்கு இலவச கல்வி சுற்றுலா” – ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தகவல்

0
24

சாயர்புரம் தூய மேரி மகளிர் பள்ளி மாணவிகளை தனது சொந்த செலவில் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாக இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இவ் விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜெயபாண்டியன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். சாயர்புரம் சேகர குரு இஸ்ரவேல்ராஜா துரைசிங் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் ப்ளஸ் 2 மாணவிகளுக்கு தமிழ அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயின்று தங்களது எதிகாலத்தை நிர்ணயித்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் மிகச் சிறந்த சாதனைகளை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் மூலம் தனது சொந்த செலவில் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாக தொpவித்தார். மொத்தம் 131 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நல்லாசிரியர் ஞானராஜ், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி, சாயர்புரம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கண்ணன், இந்திரா, பிரவீணா, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், வட்டார காங்கிரஸ் தலைவர் சொரிமுத்து பிரதாபன் ஊடகப் பிரிவு மரியராஜ், முத்துமணி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன் துரை, சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப், சாயர்புரம் ஜெயக்குமார், கேபிரியேல் கருப்பசாமி மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here