நாசரேத் அருகில் மூக்குப்பீறி கிராமப்புறத் தமிழ் மன்றத்தின் சார்பாக விருது வழங்கும் விழா!

0
16

நாசரேத்,செப்.22: நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி கிராமப்புறத் தமிழ் மன்றத் தின் சார்பாக விருது வழங் கும் விழா நடைபெற்றது.

நாசரேத் அருகில் உள்ள கிராமப்புறத் தமிழ் மன்றத்தின் சார்பாக தமிழ் மன்ற அலுவலகத்தில் நடை பெற்ற விருது வழங்கும் விழா நிகழ்ச்சிக்கு கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வ மணி தலைமை வகித்தார். தமிழ் மன்ற நிறுவனர் கவிஞர் தேவதாசன் வரவேற்று பேசினார். விழாவில் தபால் தலைகள், நாணயங்கள், பழங்காலப் பொருட்களை சேகரித்து காட்சிபடுத்திவ ரும் நாசரேத்பொன்சந்திரன் ஸ்டேன்லிக்கு சாதனைத்தி லகம்விருதுவழங்கப்பட்டது. விழாவில் அரிமா விவின் ஜெயக்குமார், முனைவர் மோசஸ்தயான்,பொன்சந்திரன், ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்வில் புன்னைச்செழியன் துரைராஜ் ஆகியோர் கலந் து கொண்டு சிறப்பித்தனர். கவிஞர் தேவதாசன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here