நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை! உள்ளூர் தொலைக்காட்சி, வலைதளங்களில் ஒளிபரப்பானது!

0
121
nazareth carch news

நாசரேத்,ஏப்.12:நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை உள்ளூர் தொலைக்காட்சி, வலைதளங்களில் ஒளிபரப்பப்பட்டது.இதனை கிறிஸ்தவர்கள் வீடுகளில் இருந்தே பார்த்துக் கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதனால் கிறிஸ்தவர்கள் தங்களது தெய்வமான இயேசு கிறிஸ்துவின் கடைசி கால பாடுகளை 40 நாள்கள் தியானித்து நிறைவாக அவர் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மாpத்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் விதமாக ஈஸ்டர் பண்டிகையை ஆசரித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோயால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை உள்ளூர் தொலைக்காட்சி, வலை தளங்களில் ஒளிபரப்பானது.

இதனை கிறிஸ்தவர்கள் வீடுகளில் இருந்தே கண்டு களித்து சிறப்பு பிரார்த்தனை செய்து பயன் பெற்றனர். நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தலைமைக்குரு எட்வின் ஜெபராஜ் தலைமையில் உதவிக்குரு இஸ்ரவேல் ஞானராஜ்,ரொனால்டு பாஸ்கரன், சபை ஊழியர்கள் ஜெபஸ்டின் தங்கபாண்டி, ஜெபராஜ்சாமுவேல் ஆகியோர் சிறப்பு ஆராதனை செய்தனர்.

இதேபோன்று பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சபை குரு ஆல்வின் ரஞ்சித்குமார் தலைமையிலும், மூக்குப்பீறி துஸயமாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெரேமியா தலைமையிலும்,உதவிகுரு கிங்ஸ்லிஜாண் முன்னிலையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரகுரு தலைமையில் சபை ஊழியர் கோயில்ராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here