நாசரேத் அருகே 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை எஸ்.ஐ சூரியன் வழங்கினார் – ஈஸ்டர் பண்டிகை ஸ்பெசல் !

0
298
nazareth

நாசரேத்,ஏப்.13: நாசரேத் அருகிலுள்ள 3 கிராமங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன் னிட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை உதவி ஆய்வாளர் சூரியன் வழங்கினார்.

நாசரேத் அருகிலுள்ள குப்பாபுரம், குரிப்பன்குளம், குரிப்பன்குளம் காலணி பகுதியிலுள்ள மக்கள் ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 300 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக் னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ், தங்கராஜ் தாம்சன்,வள்ளியூர் நேரு செவிலியர் கல் லூரி முதல்வர் மார்க்கெட் ரஞ்சிதம் தாம்சன்,கோழிப்பண்ணை அதிபர் ஜெபக்குமார், சுபீனா கோழிதீவண நிறுவனத்தின் இயக்குனர் ஜாண் ரபீந்தர் ஆகியோர் இணைந்து நிவாரணப்பொருள்களை 300குடும்பங்களுக்குவழங்கினர்.

நாசரேத்காவல்துறை உதவி ஆய்வாளர் சூரியன் தலைமைவகித்து நிவாரணப்பொருள்கள் வழங்குவதை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் உடையார்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here