கொரோனா வைரசை அடியோடு அழிக்கும் கிருமிநாசினி ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடனே அதற்கு காப்புரிமை கிடைக்கபட்டு அது பயன்பாட்டுக்கு வர செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் சார்பில் நமது கோரிக்கையாகும்.
சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகையே பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனா வைரசை எப்படி ஒழிப்பது என தெரியாமல் உலகநாடுகள் தவித்து வருகின்றன. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவுகிறது. இதை தடுக்க கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என டாக்டர்கள் பொதுவாக வலியுறுத்தி வருகிறார்கள். அதை பயன்படுத்தினால் தொற்றுலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் ஆனால் வைரஸை முழுமையாக அழிக்க முடியாது.
ஆனால் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அந்த வைரஸை முழுமையாக அழிக்கும் ஏ.யு சானிடைசர் என்கிற கிருமிநாசினி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். பல்கலைக்கழகத்தின் என்.எச்.எச்.ஐ.டி எனப்படும் சுகாதார கருவிகள் மேம்பாட்டுக்கான தேசிய மையம் இந்த கிருமி நாசினியை உருவாக்கி உள்ளது.
இதுபற்றி என்.எச்.எச்.ஐ.டி.யை சேர்ந்த பேராசிரியர் சங்கர் கூறியதாவது : நாங்கள் உருவாக்கியுள்ள கிருமிநாசினி குரலை வைரசை அளிப்பதை அதன் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்தி உள்ளோம். ஏனெனில் காரணம் வைரசும் நாங்கள் தயாரித்துள்ள கிருமினாசினியும் ஒரே அமிலத்தை கொண்டுள்ளன. இது வைரஸை அடியோடு அழிக்கும்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரிடம் வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் இந்த கிருமி நாசினி யை பயன்படுத்தினால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதோடு அடியோடு அழித்துவிடவும் முடியும். இந்தக் கிருமி நாசினியை கைகள், உடல் பகுதிகள் முகக் கவசங்கள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள் என எதிலும் பயன்படுத்தலாம்.
இப்போது பயன்பாட்டில் உள்ள கிருமிநாசினிகள் உடன் இந்த ஏ. யு கிருமிநாசினியை சிறிதளவு கலந்தால் போதுமானது. இதனால் கிருமிநாசினிகள் விலை 10 ரூபாய் அதிகரிக்கலாம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இந்த கிருமி நாசினி யை தெளித்தாலும் அல்லது மூக்கில் சில சொட்டுக்கள் விட்டாலும் வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும் வைரஸும் இறந்துவிடும்.
இதை 200க்கும் அதிகமானோர் இடம் பயன்படுத்தியதில் நல்ல பலன் கிடைத்து உள்ளது. இந்த கிருமிநாசினிக்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட அண்ணாபல்கலைக்கழகம் தயாராகியுள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.
உடனே இதற்கு காப்புரிமை பெறப்பட்டு இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நமது விருப்பமும் கோரிக்கையும்.
nadunilai.com R.S.SARAVANAPERUMAL