நாசரேத்,ஏப்.19:நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சார்ந்த ஏழை,எளிய மக்கள் 25 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப் பொருள் களை நாசரேத் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி வழங்கினார்.
நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை கத்தோலிக்க தேவாலய ஏழை, எளிய மக்கள் 25 குடும்பங்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் மதிப்புள்ள அரிசி,மளிகை,காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரணப்பொருள்களை தன்னார்வலர்க ஜோசப் ஏற்பாட்டில்வழங்கப்பட்டது.
பங்குத்தந்தை அந்தோணிஇருதய தோமாஸ் அர்ச்சித்து பொருள்கள் வழங்குவதை துவக்கி வைத்தார்.நாசரேத் காவல்ஆய்வாளர் சகாயசாந்தி நிவாரணப்பொருள்களை வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை அண்ட்ரூ ஜார்ஜ், அருண் சாமுவேல் என்ற தம்பு ஆகியோர் செய்திருந்தனர்.