அய்யனடைப்பு பஞ்., தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்

0
51
ayyanataippu

தூத்துக்குடி, ஏப்.30:

அய்யனடைப்பு பஞ்சாயத்திலுள்ள தூய்மைப்பணியாளர்கள், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு பஞ்சாயத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து தவறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்டகணபதி ராஜேந்திரன், துணைத்தலைவரும், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவருமான ராஜேந்திரன் உத்தரவின்படி தினம்தோறும் பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், முக்கிய இடங்கள் மற்றும் அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினிகள் தவறாமல் தெளிக்கப்பட்டு வருகிறது.

அதோடு, தூய்மை பணியாளர்கள் மூலமாக தினமும் பஞ்சாயத்திலுள்ள அனைத்துப்பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் போதிய வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்டகணபதி ராஜேந்திரன், துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பஞ்சாயத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வீடு தேடி சென்று நேரில் வழங்கினர்.

இதுபோன்று பஞ்சாயத்திற்குட்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கும் பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்டகணபதி ராஜேந்திரன், துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முககவசம், சீருடைகள், கையுறைகள், அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினர். இதில், பஞ்சாயத்து செயலாளர் சங்கரராமன் நயினார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here