மதுரை மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் கோவில்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

0
111
kvp news

மதுரை மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் ஒருவர் கோவில்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கோவில்பட்டி ராமையா நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவருடன் மருத்துவமனையில் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில்பட்டிக்கு 01.05.2020 அன்று வந்துள்ளார். தகவல் கிடைத்தவுடன் நகராட்சி ஆணையாளர்.ஓ.ராஜாராம் உத்திரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ், பயிற்சி சுகாதார ஆய்வாளர் சரண்குமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்படி பயிற்சி மருத்துவரின் வீட்டிற்கு நேரில் சென்று தேவையான முககவசம் மற்றும் கைசுத்திகரிப்பான் வழங்கி மேற்படி நபரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்கள்.

மேலும், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேற்படி நபருக்கு கொரோனா தொற்றுக்கான சளி பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here