நங்கைமொழி பஞ்சாயத்தில் 500 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி வீதம் உதவிகள் – பஞ்.தலைவர் வழங்கினார் !

0
74
thiruchendur

திருச்செந்தூர் அருகே உள்ள நங்கைமொழி ஊராட்சிக்குட்பட்ட 500 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசிகள் வீதம் நலத்திட்ட உதவிகளை பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ் வழங்கினார்.

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி யூனியனுக்குட்பட்ட நங்கைமொழி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தின் காரணமாக தேசிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் கிராம மக்கள் வேலைக்கு செல்லாமல் பாதிக்கப்பட்டு ள்ளனர். எனவே இந்த ஊராட்சியிலுள்ள 500 குடும்பங்களுக்கும் ஐந்து லட்சம் மதிப்புள்ள தலா 25 கிலோ அரிசி விதம் வழங்கினார்.

மேலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் ஆதரவற்றோர் ஊனமுற்றோர் உள்ளிட்ட 200 நபர்களுக்கு தினசரி மூன்று வேளையும் உணவு பார்சல்களையும் விடுவீடாக சென்று பஞ்சாயத்து தலைவர் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here