லெட்சுமிபுரம் துவக்க பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆசிரியை வழங்கிய நிவாரண உதவி !

0
135
nazareth school

நாசரேத்,மே.11: லெட்சுமிபுரம் துவக்கப்பள்ளி தலைமையாசியை தனது மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய நிவாரண உதவிகளை தாளாளர் தனசிங் வழங்கினார்.

மெஞ்ஞானபுரம் அருகிலுள்ள லெட்சுமிபுரம்-மருதூர்க்கரை டி.என்.டி.ஏ.துவக்கப் பள்ளி தலைமையாசிரியை ஜிகிந்தா தனதுபள்ளியில்பயிலும் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாணவ,மாணவிகளின் பெற்றோர்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் ஆயிரத்தை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்.

இதனை பள்ளியின் தாளாளரும், லெட்சிமிபுரம் மருதூர்க்கரை சேகர குருவானவருமான கே.தனசிங் வழங்கினார்.இந்நிகழ்வில் சபை ஊழியர் வினோஜ் சாமுவேல், தலைமையாசிரியை ஜிகிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here