ஒரு அனுபவத்திற்கு பிறகுதான் அருமை தெரியும் என்பார்கள். அப்படித்தான் இருக்கிறது கொரோனா அனுபவத்திற்கு பிறகு செவிலியரின் அருமை. உலகமே மருத்துவ துறையினரை கையெடுத்து கும்மிட்டது. அந்த துறையில் உள்ள செவிலியர் போக்கத்தக்கவர்களே.
ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நாளை தேர்வு செய்து அந்த நாளை அத்துறை சார்ந்த நாளாக கொண்டாடி வருகிறது உலகம். அந்த வகையில் மே 12-ம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அந்த நாள்.
செவிலியர் பணியில் நவீன முறையை புகுத்திய பிரிட்டனை சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் பிறந்த நாளான மே 12-ஐ கவுரவிக்கும் விதமாக 1974 முதல் இந்த தினம் தொடங்கப்பட்டு அன்றைய தினத்தில் செவிலியர் நினைக்கப்படுகிறார்கள்.
மற்ற காலங்களில் வந்த மே 12 எல்லாம் எப்படி கடந்து போனதோ தெரியாது. இந்த ஆண்டு மே 12 நிச்சயமாக செவிலியரை கவுரபடுத்த வேண்டிய நாளாகும். எத்தனையோ அச்சுறுத்தலுக்கு நடுவில் நெருங்க முடியாத, நெருங்க கூடாத நோயாளிகளையும் தொட்டு தூக்கி காப்பாற்றும் பொறுப்பில் இருந்து வரும் செவிலியரை, அவர்கள் தினத்தில் நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம்.
-நடுநிலை.காம் ஆர்.சரவணப்பெருமாள்