தூத்துக்குடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 2ஆம் கட்ட நிவாரண உதவி!

0
25
nadunilai news

நாசரேத், மே.13:தூத்துக்குடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கும் 2ஆம் கட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கும் 2ஆம் கட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞான ரமேஷ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் நிக்சன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், கபசுர குடிநீர், ஹேன்ட் வாஷ் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட பொருளாளர் சாந்தகுமார், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் ஞானதுரை, துணைத் தலைவர் சண்முக ஆனந்தன், செய்தி தொடர்பாளர் விக்னேஷ், மூத்த பத்திரிக்கையாளர் குமாரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி புறநகர் மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பத்திரிக்கையா ளர் சங்க உறுப்பினர்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விதவைகள், ஏழைகளுக்கு 2-ஆம் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மாநில துணைத்தலைவர் ஜெ.நிக்சன், புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞானரமேஷ், பொருளாளர் சாந்தகுமார், புதுகை வரலாறு செய்தியாளர் ஜெயஷீபா, புகைப்படக்கலைஞர் சின்னத்துரை, ஆழ்வார்திருநகரி பொன்ராஜ், நாசரேத் கிறிஸ்டோபர், ஆபிரகாம், சதீஷ், உள்பட பலர் கலந்து கொண் டனர்.

சங்க உறுப்பினர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வித வைகள், ஏழைகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அரிசி, து.பருப்பு, சமையல் எண்ணெய், சோப்பு,மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட 17 வகையான மளிகை சாமான்கள் நிவாரணங்களாக வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here