டெல்லியில் தொடர்கிறது போலீஸாரின் போராட்டம் – உயர் அதிகாரிகள் சொல்லியும் கேட்கவில்லை !

0
797
delhi news

டெல்லி: டெல்லியில் கடந்த 2ம் தேதி போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் சதிஷ் கோல்ச்சா உறுதி அளித்துள்ளார். இந்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி ஹைகோர்ட் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் போலீசார் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் பார்க்கிங் பிரச்சனையில் போலீசாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்கினார்கள்.இதில் போலீசார் பலர் மோசமாக காயம் அடைந்தனர்.

இந்த பிரச்சனைக்கு எதிராக தற்போது டெல்லியில் போலீசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது.

2ம் தேதி தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பல இடங்களில் போலீசார் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பைக்கில் செல்லும் போலீசார்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் கூட தாக்குதலுக்கு உள்ளார்கள். காக்கி சட்டையை பார்த்தாலே அடிப்போம் என்ற நிலைக்கு கருப்பு சட்டை சென்றதால் டெல்லியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் தற்போது டெல்லியில் போலீசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காலையில் இருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான டெல்லி போலீசார் போராட்டம் நடத்தி வருகிறார். டெல்லி போலீஸ் ஆணையர், கூடுதல் ஆணையர், சிறப்பு ஆணையர் என்று மூன்று முக்கிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடியவில்லை.

டெல்லி சிறப்பு ஆணையர் சதிஷ் கோல்ச்சா இன்று போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அவர்களின் பாதுகாப்பு கண்டிப்பாக உறுதி செய்யப்படும்.

நம்மை எல்லோரும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றம் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறது. நாம் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். போலீஸ் -வழக்கறிஞர் சண்டை தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும்.

வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும். வழக்கறிஞர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும். வழக்கறிஞர்கள் தாக்கியது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று டெல்லி சிறப்பு ஆணையர் சதிஷ் கோல்ச்சா உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here