நாசரேத்தில் வழக்கை வாபஸ் செய்ய கேட்டதில் தகராறு – விவசாயி மீது தாக்குதல்

0
139
nazareth attack

நாசரேத்தில் விவசாயியை தாக்கிய மற்றொரு விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.

நாசரேத் அருகே உள்ள முதலைமொழியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (53). விவசாயியும், அதே ஊரைச் சேர்ந்த கோயில் ராஜ் என்பவரும் நண்பர்களாம். கோயில்ராஜிக்கும், அதே ஊரைச்சேர்ந்த இம்மானுவேல் (46) என்பவருக்கும் முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் சோமசுந்தரம், நாசரேத் சந்தி கடை வீதி பகுதியில் நின்றபோது அங்கு வந்த இம்மானுவேல், அவரிடம் கோயில்ராஜிக்கும், தனக்கும் வழக்கை முடிவுக்கு கொண்டு வர அவரை வழக்கை வாபஸ் வாங்கிட கூறுமாறு , சோமசுந்தரிடம் தெரிவித்தாராம். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மோதல் ஏற்பட்டதாம். இதில் இம்மானுவேல், சோமசுந்தரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் உதவி ஆய்வாளர் தங்கேஸ்வரன் வழக்குபதிந்து இம்மானுவேலை தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here