”கொரோனா வைரஸ்” நோய் தாக்குதல் அழிந்திட வேண்டி ”ஸ்ரீசித்தர்” பூமிக்குள்ளே 8மணிநேர பஞ்ச பூத தியானம்..!

0
4
korampallam siththar

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கமானது இவ்வுலகில் இருந்து முற்றிலுமாக அழிந்து இல்லாமல் போக வேண்டி ஸ்ரீசித்தர் நெருப்பு வளையத்தின் நடுவில் பூமிக்குள் தலை மட்டும் தெரியும் வரை புதைந்து நிலையில் நின்று ”பஞ்ச பூத தியான” வழிபாடு செய்தார்.

உலகம் முழுவதும் பரவி வருவதுடன், உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் நோய் தாக்குதலானது முற்றுப்பெறாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக நீங்கி அனைத்து மக்களும் அச்சமின்றி, மனதைரியம் பெற்று நோயின்றி நலமாக வாழ்ந்திடவேண்டி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி -மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் முதல் வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து சிறப்பு யாக வேள்வி வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரசின் அறிவுறுத்தல்படி பக்தர்கள் யாரும் இல்லாமல் ஸ்ரீ சித்தர் பீடத்தின் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாகத்துடன் மஹா வேள்வி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இதன்படி, உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலானது இவ்வுலகில் இருந்து முற்றிலுமாக அழிந்து இல்லாமல் போக வேண்டி சித்தர்களின் வழிபாட்டு முறையில் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்தின் நடுவில் மண்ணுக்குள் தலை மட்டும் தெரியும் வகையில் புதைந்தபடி நின்ற நிலையில் எட்டு மணிநேரம் ”பஞ்ச பூத தியானத்துடன்” சிறப்பு வழிபாடு செய்தார்.

தன்னை சுற்றிலும் தகதகவென கொளுந்து விட்டு எரியும் கடுமையான நெருப்பு வளையத்திற்கு நடுவினிலே தலை மட்டும் வெளியே தெரியும் வகையில், உடல் முழுவதையும் கழுத்து வரை மண்ணுக்குள் புதைத்த நிலையில் உடலை வருத்தி தொடர்ந்து எட்டுமணிநேரம் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கட்டுக்குள் கொண்டுவந்து அவற்றைகொண்டு தியான வழிபாடு நடத்துவதன் மூலமாக வேண்டியபடி நற்பலன்கள் யாவும் கிடைத்திடும் என்பது ஐதீகமாகும்.

இதுகுறித்து, ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் கூறியதாவது, கொரோனா வைரஸ் குறித்து பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் போகவேண்டி வாரம்தோறும் ஸ்ரீசித்தர் பீடத்தில் சிறப்பு யாகம் மற்றும் கடுமையான தியானத்துடன் கூடிய வழிபாடுகள் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தவகையில், நமது இந்திய திருநாடு மட்டுமின்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக இல்லாமல் அழிந்து போகவேண்டியும், அனைத்து மக்களும் நலமாக வாழ்ந்திடவேண்டி ஸ்ரீசித்தர் பீடத்தில் சிறப்பு மஹா யாகவேள்வியுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்தவகையில், அமாவாசையை முன்னிட்டு எமது முன்னோர்களான சித்தர்கள் கற்றுத்தந்த கடும் தவத்தின் வழியில் பஞ்சபூதங்களை ஒருங்கிணைந்து அவற்றின் மூலமாக கொடிய வைரஸான கொரோனா முற்றிலுமாக அழிந்து போக வேண்டி மண்ணுக்குள் புதைந்த நிலையில் பஞ்ச பூத தியானத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here