”ஓன் போர்டு வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ – ஓட்டுநர் தொழிற்சங்கம் கோரிக்கை

0
83
thoothukudi colltector

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் கால் டாக்ஸி, ஆட்டோ, மேக்சி கேப், ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் பசி, பட்டினி வட்டி போன்ற கொடுமைகளில் சிக்கித்தவிக்கிறோம். எனவே எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் ‘உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்’ சார்பில் அதன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எம்.ஜெயராஜ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ‘’1) வாகனத்தின் தகுதிச்சான்று ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் பர்மிட் ஆகிவிட்டிருக்கும் மேலும் மூன்று மாத காலம் அதாவது செப்டம்பர் 30 2020 வரை அவகாசம் அளிக்க வேண்டும்.

2) ஊரடங்கு காலத்தில் கட்டவேண்டிய 2 காலாண்டு வாகன சாலை வரிகளையும் ரத்து செய்ய வேண்டும்.

3) நலவாரியத்தில் பதிவு செய்யாத பதிவு செய்த கால்டாக்ஸி மேக்சி கேப் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவருக்கும் நிவாரண தொகையாக ரூபாய் 20000 வழங்க வேண்டும்.

4) கால் டாக்ஸி மேக்சி கேப் ஆட்டோக்கள் 50 சதவிகித பயணிகளுடன் தமிழகம் முழுவதும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.

5) வாகன தவணைகளை கட்டுவதற்கு மொத்தம் ஆறு மாத காலம் அவகாசம் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது இந்த காலத்தில் பொது போக்குவரத்து வாங்கப்பட்ட கால் டாக்சிகள் ஆட்டோக்கள் மேக்சி கேப் மீதான கடன்களுக்கு எந்தவித வட்டியும் அபராதமும் விதிக்க கூடாது.

6) ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் ஓடாத நாட்களை கணக்கில் எடுத்து இன்சூரன்ஸ் தேதியை நீட்டித்து தர வேண்டும்.

7) சொந்த பயன்பாட்டுக்கு உள்ள வாகனத்தை அதாவது ஓன் போர்டு வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்துவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது வருவாய் இழப்பை சரிசெய்ய வாகன உரிமையாளர் மீதும் வாகனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் குறித்து உடனடியாக அரசு முடிவுகளை எடுக்காவிட்டால் எங்களுடைய கால் டாக்சி ஆட்டோக்கள் மேக்சி கேப் போன்றவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒப்படைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here