புதுக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியைகள் நிவாரணப்பொருட்கள் வழங்கல் !

0
136
srivai news

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியிலுள்ள டி.என்.டி.டி.ஏ.தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களின் குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியைகள் தங்களது சொந்த செலவில் கொரோனா நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

கொரோனா வைரஸ் பரவிடாமல் தடுத்திட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் 15தினங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்றுமாத காலமாக தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தொழிலாளர்கள், விவசாயிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை-எளிய பொதுமக்கள் போதிய வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த அளவிற்கு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.

இந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியிலுள்ள டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் குடும்பத்தினருக்கு பள்ளியின் ஆசிரியைகள் தங்கள் சொந்த செலவில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்குடி டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சந்திரா எட்வர்டு, உதவி ஆசிரியை ஹெப்சிபாவிஜய் ஆகியோர் தங்களது சொந்த செலவில் வாங்கிய நிவாரணப்பொருட்களை ஸ்ரீவைகுண்டம் சேகர குருவானவர் பீட்டர் தாமஸ் மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வழங்கினார்.

இதில், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்படி முககவசம் அணிந்தும், தகுந்த சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சந்திராஎட்வர்டு, ஹெப்சிபாவிஜய் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here