ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண் இயந்திரங்கள்

0
45
srivaikundam

ஸ்ரீவைகுண்டம், ஜூன்.2:

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் கூட்டுப்பண்ணையம் 2019-20ம்ஆண்டு திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம், அணியாபரநல்லூர் கிராமங்களில் ‘உழவர் ஆர்வலர்’ மற்றும் ‘உழவர் உற்பத்தியாளர்’ குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கிராமங்கள் அளவில் சிறப்பாக செயல்பட்டுவரும் ‘உழவர் ஆர்வலர்’, ‘உழவர் உற்பத்தியாளர்’ குழுக்களை ஊக்குவித்திடும் பொருட்டு இரண்டு கிராமங்களிலும் உள்ள குழுக்களுக்கு தலா ரூ.5லட்சம் வீதம் ரூ.10லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு, வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி மைய துணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஊமைத்துரை, உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு குழுவினருக்கு பவர் டில்லர், பவர் வீடர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வழங்கி குழுவின் செயல்பாடுகள் குறித்தும், விவசாயத்தின் மேன்மைகள் குறித்தும் பேசினார்.

இதில் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அசோக் அய்யாச்சாமி, முத்துகிருஷ்ணன், உழவர் ஆர்வலர் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் முககவசம் அணிந்து தகுந்த பாதுகாப்புடனும், சமூகஇடைவெளி கடைபிடித்த வகையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா, உதவி தொழில்நுட்பமேலாளர்கள் அசோக் அய்யாச்சாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here