நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் – வைரமுத்து டுவிட்

0
25
201906181739095229_I-congratulate-you-on-your-promise-in-Tamil--Vairamuttu_SECVPF.gif

நாடாளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். 
தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.
இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து  நாடாளுமன்றத்தில் தமிழில்  உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 
நாடாளுமன்றத்தில் தமிழில்  உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும்  எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் – மொழி காக்க தமிழையும் ஆட்சிமொழி ஆக்க என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here