ஏரல் தனியார் ஆஸ்பத்திரி டாக்டரின் ஓட்டுநர் உள்பட 5 பேருக்கு கொரோனா – சாயர்புரம் அருகே லாக்டவுன்

0
491
sawyerpuram corona

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் தனியார் ஆஸ்பத்திரி இருக்கிறது. அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான மருத்துவர் ஏரலில் வசித்து வருகிறார். சாயர்புரம் அருகே நடுவைகுறிச்சிதான் அவருக்கு சொந்த ஊராகும். சமீபத்தில் மருத்துவரின் தந்தையார் இறந்து போனார். அந்த துக்க வீட்டிற்கு சென்னையிலிருந்து சிலர் வந்திருக்கிறார்கள். இறந்து போனவரின் உடல் நடுவைகுறிச்சியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மருத்துவரின் கார் ஓட்டுநருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து துக்க வீட்டிற்கு வந்தவர்கள் மூலம் கார் ஓட்டுநருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

ஓட்டுநருடன் தொடர்பில் இருந்த நான்கு பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் அதற்கான ரிசல்ட் வரவில்லை வருவாய்த்துறை, சுகாதாரதுறை, சாயர்புரம் பேரூராட்சி நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது அந்த பகுதி.

அதுபோல் செந்தியம்பலம் அருகே நல்லமலை பகுதிக்கு சென்னையிலிருந்து சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பரிசோதனை நடத்தியதில் 4 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்பது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் சிலருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

வி.ஏ.ஓ நட்டார்செல்வி, மருத்துவர் ஜெனிஃபர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அங்குசாமி, பஞ்.தலைவி சங்கரஷ்வரி உள்ளிட்டோர் கண்காணித்து வருகிறார்கள்.

இருவார காலம் இப்பகுதிகள் தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்கிறார்கள். நடுவைகுறிச்சி மற்றும் நல்லமலைபகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here