ரூ. 37.50 லட்சம் மகளிர் சுயஉதவிக்குழு கடன் – எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்

0
180
s.p.shanmuganathan admk

பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் ரூ. 37.50 லட்சம் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

ஏரல் 2020 ஜூன் 14

தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் உதவியை பயனாளிகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமானஎஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் தலைவர் திருமதி. ஆஷா சண்முகநாதன் தலைமையில் பண்டாரவிளை கிளை வங்கியில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வங்கி துணை தலைவர் சந்திரபால், வங்கி செயலாளர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ரூபாய் 37.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கி பேசினார்.

அப்போது வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் வேதமாணிக்கம், மந்திரம், ஐயாக்குட்டி, ரவிச்சந்திரன், சந்தரலிங்கம், சேர்ந்தபாண்டி, கலாவதி, எமிலி அமுதா, அனந்தம்மாள், வங்கிப் பணியாளர்கள் ராஜலட்சுமி, செல்வி, ரவிச்சந்திரன், அருணாச்சலம், மாரியப்பன், பெருங்குளம் அதிமுக பிரமுகர்கள் பண்டாரவிளை பாஸ்கர், பால்துரை, சுரேஷ் உட்பட பலர் இருந்தனர்.

நிகழ்ச்சியில் பெருங்குளம் நகர கூட்டுறவு கடன் வங்கியின் கிளை மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here