விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய..ராகுல்காந்தி பிறந்தநாள் விழாவில் காங். வலியுறுத்தல்..

0
73
congress news

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் 50வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாநகர் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் பாரகன் அந்தோணிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி தலைவர் டேவிட்பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ஜெயக்கொடி, மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் அருள்வளன் வரவேற்றார்.

விழாவில், தூத்துக்குடி மாவட்ட மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தியாஜெயக்குமார் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது, தூத்துக்குடி மாநகர் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் பாரகன் அந்தோணிமுத்து பேசியதாவது, மத்திய, மாநில அரசுகளால் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் விவசாயம் நலிவடைந்துகொண்டே வருகிறது.

தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்கின்ற மோடி அரசு, நாட்டுக்காக உழைத்துவரும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில்லை என்பது முரண்பட்ட செயலாகும். தற்போதுள்ள சூழலில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திடவேண்டும். ஆறுவழிச்சாலை, சாலை விரிவாக்கம், மீத்தேன், ஈத்தேன் என எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதற்காக விவசாய நிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் கையகப்படுத்தக்கூடாது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் கடன் பெறும் முறைகளை எளிமையாக்கவேண்டும். தற்போதுள்ள கொரோனா காலத்தில் நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தியுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கும், உத்திரபிரதேசத்தில் பணிபுரிந்துவந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதி செய்துகொடுத்த இளம் தலைவி பிரியங்காகாந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

இதில், நிர்வாகிகள் மிக்கேல்குரூஸ், லெட்சுமணன், முனியசாமி, ஜெகன், சாமிபாண்டியன், சுடலைமாடன், பார்த்தீபன், மாரியப்பன், நாராயணன், உமா, கனியம்மாள், மனுவேல், ராஜபாண்டி, கிருஷ்ணன், அருணாச்சலம், பாலசுப்பிரமணியன், மகாலிங்கம், தனிஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாநகர் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க ஒருங்கிணைப்பாளர் பாரகன்அந்தோணிமுத்து தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here