உலக யோகா தினம் இன்று – ஆதரிப்போம் ஆரோக்கியம் பெறுவோம்

0
26
yoga

உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்திற்கும் எதோ ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தின்படியே உருவாகுவதும் முடிவதுமாக இருக்கிறது. அந்த உயிரை தாங்கியிருக்கிற உடல் எத்தகைய ஆரோக்கியம் கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு தோன்றலின் நோக்கத்தை அந்த உடலில் ஒட்டியிருக்கிற உயிர் நிறைவேற்றி கொள்கிறது.

நீர்,நிலம், நெருப்பு,காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூதங்களின் தொகுப்பே இந்த உலகம். அதேபோல் ஒவ்வொரு உயிரையும் தாங்கியிருக்கிற உடல்களும் பஞ்சபூதங்களின் தொகுப்புதான்.

வெளியிலும் தண்ணீர் இருக்கிறது, உடலிலும் தண்ணீர் இருக்கிறது அதுபோல், வெப்பம், நிலத்தில் விளையிற உணவு,காற்று, ஆகாயம் என அத்தனையும் உடலில் சம்மந்தம் உள்ளது. இந்த பஞ்சபூதங்களோடு அனைத்தையும் இணைக்கும் கருவியே யோகா. உடல் மறந்து உலகோடு ஒன்றிப்போகிற அஞ்ஞானமுள்ள விஞ்ஞானமே யோகா.

இந்த விஞ்ஞானம் இந்தியாவில் அதுவும் தமிழன் கலாச்சாரத்தில் வாழ்வியலில் உருவானது என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது. அனைவரும் யோகாவை கற்றுக் கொண்டு யோகாவை வாழ்க்கையில் ஒரு அங்கமாக பாவிப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here