அரசு ஆஸ்பத்திரியில் இரத்ததான முகாம் – விஜய் இரத்ததானக் கழகம் ஏற்பாடு

0
14
viyai news

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் விஜய் இரத்ததானக் கழகம் சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். செயலர் விக்கி, பொருளாளர் அஜித், துணைச் செயலர் வெள்ளப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவர் தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 27 பேரிடமிருந்து இரத்தத்தை சேகரித்தனர். இதில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன், மாரிசாமி, கந்தன், பாபு, பிரகாஷ், வீரமாதவன், சுமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here