ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12வது ஆண்டு துவக்க விழா

0
34
srivaikundam sdip

ஸ்ரீவைகுண்டம் 22

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12வது ஆண்டு துவக்க விழா அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதன்படி, ஸ்ரீவைகுண்டம் கிளையில் நடைபெற்ற விழாவிற்கு கிளைத்தலைவர் சித்திக் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சதாம் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அப்பாஸ் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோன்று, கேம்பலாபாத்தில் நடைபெற்ற விழாவிற்கு, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் அப்துல் தலைமை வகித்தார். கேம்பலாபாத் கிளைத்தலைவர் இம்ரான், துணைத்தலைவர் சுபுஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மாவட்ட பொதுச்செயலாளர் உஸ்மான் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத்தொடர்ந்து, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் அப்துல், ஒன்றிய செயலாளர் ஹாஜா, கேம்பலாபாத் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஹாஜா உதுமான் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற விழாவில் கிளைத்தலைவர் பாதுஷா கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு கிளையின் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் உஸ்மான் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார். இதில், கிளைச்செயலாளர் நஜிமுதீன், நிர்வாகி நாசர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தற்போதுள்ளசூழலில், கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் அரசின் அறிவுறுத்தல்படி தகுந்த தனிமனித இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here