சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் – கோவில்பட்டியில் கடைகள் அடைப்பு

0
85
kovilpatti

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினரை கண்டித்து கோவில்பட்டியில் தற்காலிக காய்கறி சந்தை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் உள்ள கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் திறந்திருக்கின்றன. தற்போது திறந்திருக்கும் கடைகள் நேற்று முன் தினம் அடைத்திருந்தன. அந்த கடைகள் அனைத்தும் வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கத்தை சேர்ந்ததாகும். இன்று அடைக்கப்பட்டிருக்கும் கடைகள் அனைத்தும் விக்ரமராஜா தலைமையிலான வணிகர் சங்கத்தை சேர்ந்தது என்பது குறிப்பிட தக்கது.

வெள்ளையன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நேற்று முன் தினம் வணிர்கள் அடைத்தனர். அதுபோல் விக்ரமராஜா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருக்கிறது. கோவில்பட்டியில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here