சாத்தான்குளம், ஜூன் 28.
போலீஸார் தாக்குதலில் காயமடைந்த மரணமடைந்ததாக கூறப்பட்ட வியாபாரிகள் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அக்கட்சி தலைவரும், நடிகர் கமலஹாசன் செல்லிடபேசியில் பேசி அவர்களது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் , அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு அவர்கள் திடீரென உயிரிழந்தனர். இதையடுத்து வியாபாரிகள் , பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து பலர் வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில பொதுச் செயலர் அருணாச்சலம் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர் யோகேஷ், மத்திய மாவட்ட செயலர் சேகர், வடக்கு மாவட்ட செயலர் கதிரவன் ஆகியோர் ஜெயராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது செல்லிடபேசியில் அக்கட்சி தலைவரும் , நடிகர் கமலஹாசன் குடும்பத்தினரிடம் நேரிடையாக பேசி ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் அனைத்து சட்ட பிரச்னைகளுக்கு துணை நிற்பதாக உறுதி அளித்தார்.