புதுக்கோட்டை அருகே ராமசந்திரபுரத்தில் திருமணவிழா முலம் 5 பேர்களுக்கு கொரோனா

0
14
ramachandrapuram

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் 4 பெண்கள், ஒஎஉ ஆண் என ஐந்து பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் சிறுமிகள் உட்பட 34 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதன் பிறகு அந்த ஊரில் சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே பரிசோதனை செய்து பார்க்கையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வருவாய்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் குமாரகிரி ஊராட்சி தலைவர் உள்பட நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை 4 பெண்கள், 1 ஆண் என ஐந்துபேர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவர்கள், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

மேலும் அந்த ஊரில் 30 ம் மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ரிசல்ட் இன்னும் வரவிலை.

இதனை தொடா்ந்து ராமச்சந்திரபுரத்தில் மாவட்ட சுகாதாரபணிகள் துனை இயக்குனா் கிருஷ்ணலீலா, தூத்துக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவா் ஜெனிஃபர் வித்யா, வட்டார மருத்தவ மேற்பார்வையாளர் ராமசாமிராஜா, ஆய்வாளா் அங்குசாமி மற்றும் அலுவலா்கள் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். குமாரகிரி ஊராட்சி மன்ற தலைவர் ஜாக்சன்துரைமணி, ஊராட்சி எழுத்தர் நாராயணன் ஆகியோரும் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here