சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த விவகாரம் – ஒரு எஸ்.ஐ கைது, விசாரணை வளையத்துக்குள் இன்னொரு எஸ்.ஐ !

0
73
sathai

சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழந்த விவகாரத்தில் ரவிகணேஷ் என்கிற எஸ்.ஐ, கைது செய்யப்பட்டுருக்கிறார் என்றும் விசரணை வளையத்துக்குள் இருக்கும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் விசாரணைக்கு சென்ற பிறகு வீடுதிரும்பவில்லை. இருவரும் உயிரிழ்ந்தார்கள்.

போலீசார் தாக்கியதில் அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரவி கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை வழிகாட்டுதலின்படி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் மாஜிஸ்திரேட்க்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தன. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதே மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் மாநில அரசு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த ஏற்பாடு செய்தது.சிபிசிஐடி அதிகாரிகள் இன்று முதல் வழக்கு விசாரணையை தொடங்கினர்.

முதல்கட்டமாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐக்கள் ரவி கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்களில் ரவிகணேசனை கைது செய்திருப்பதாகவும் விரைவில் பாலகிருஷ்ணன் கைது செய்யப்படுவார் என்றும் அடுத்தடுத்து குற்றம்சாட்டவர்கள் ஆய்வாளர் ஸ்ரீதர், ஏட்டுக்கள் மகராஜன், முருகன், முத்துராஜ்,செல்லத்துரை ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்றும் சொல்லப்படுகிறது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here