மாவட்ட எஸ்.பி தலைமையில் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் – திரேஸ்புரத்தில் நடந்தது

0
137
thothukudi s.p

தூத்துக்குடி வடபாகம் திரேஸ்புரம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் போலீஸ் – பொது மக்கள் நல்லுறவுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று (04.07.2020) காலை தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், அது நம்மை பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.

பின் தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். காவல்துறை உங்களுக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக உள்ளது எனவும் உங்களது குறைகளை என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மீனவளத்துறை உதவி இயக்குனர் ஆண்ட்ரோ பிரின்சி வயோலா மற்றும் புஷ்ரா சப்னம், நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து சங்க தலைவர் ராபர்ட், துணை தலைவர் சேஷையா, செயலாளர் பர்னபாஸ், பொருளாளர் ஜேம்ஸ், ஊர் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here