’’தந்தை,மகன் மரண வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது’’ – சாத்தான்குளத்தில் ஜி.கே.வாசன் எம்.பி. பேட்டி!!

0
226
G.K.vasan

தூத்துக்குடி, ஜூலை.06:

சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மூன்று லட்ச ரூபாய் நிதிவுதவி வழங்கினார்.

ஜெயராஜ் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம், ‘’அம்மா கணவரையும் மகனையும் இழந்த உங்களின் தவிப்பு ஈடு செய்ய இயலாதது என்பதை நான் அறிவேன். அதற்க்காக நான் மிகவும் வருந்துகின்றேன். நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இங்கு வரவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்திருக்கின்றேன். சம்பவம் நடந்ததும் மாவட்ட தலைவர் விஜயசீலன் என்னிடம் உடனடியாக தகவல் தெரிவித்தார்.

வேண்டிய உதவிகளை உடன் இருந்து கவனிக்க சொன்னேன். தொடர்ந்து நான் சூல்நிலைகளை கேட்டறிந்தேன். மிகவும் மனம் வேதனையாக இருக்கிறது. விஜயசீலன் உங்களுக்கு மிகவும் பரீட்சையமானவர். எனவே அரசியல் அப்பாற்பட்டு குடும்பத்தில் ஒருவராக தங்களுக்கு என்ன உதவி என்றாலும் உடனடியாக செய்து கொடுக்க நான் தயாராக உள்ளேன். மாவட்ட தலைவர் விஜயசீலன் மூலம் எமக்கு தெரியப்படுத்துங்கள்’’ என்றார்.

பின்னர் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது, ’’ஜெயராஜ்,பென்னிக்ஸ் விவகாரத்தில் அநாகரிகமான சம்பவம் நடந்துள்ளது. சட்டபடியான நடவடிக்கை தொடரவேண்டும். இந்த நடவடிக்கை முடிவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ரணத்திற்கு மருந்தாக விசாரணை மூலம் நியாயம் கிடைக்க வேண்டும்.

விசாரணை போகும்பாதை சரியாக உள்ளது. இதனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் இந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையில் இருப்பதால்தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில் உள்ளது.

ஒரு சில காவல்துறையினரின் தவறான அணுகுமுறையால் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதே காவல் துறையை சார்ந்த சிபிசிஐடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது’’ என்றார். அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் வந்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here