சாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரத்தை விசாரிப்பதற்காக களம் இறங்கிய சிபிசிஐயிடமிருந்து அந்த வழக்கு சிபிஐயிடம் கைமாறியது. அதிரடியாக நடவடிக்கை எடுத்து பத்துபேர்களை கைது செய்த சிபிசிஐடியினர், நேற்று வழக்கு சம்மந்தமான ஆவணங்கள் முழுவதையும் சிபிஐ வசம் கொடுத்தனர். இன்று சிபிஐ அதன் பணியை தொடங்கியது.
இந்தநிலையில் தூத்துக்குடி சிபிசிஐடி அல்வலகத்திற்கு வந்த அதன் ஐஜி சங்கர், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அழைத்தார். அனைவருக்கும் முன்பாக ‘ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தீர்கள்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.