நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் 130-வது குழந்தைகள் தினவிழா!

0
263
nazareth shcool news

நாசரேத்,நவ.18:நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 130-வது குழந்தை கள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    மறைந்த பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130-வது பிறந்த நாள் விழா நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளித்; தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் சத்தியவதி மனோகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு வாழ்த்தி பேசினார். 

இவ்விழாவில் குழந்தைகள் நேருவின் வேடம் அணிந்து வந்து இருந்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் நேருவின் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளை நடித்து காட்டினர். குழந்தைகள் நலனுக்காக “குழந்தை உறுதிமொழி” என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி உதவி முதல்வர், மகிலா சரவணன் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here