டி.ஆர்.பி. மறுதேர்வு; ஆசிரியர் வாரியம் உறுதி

0
45

டி.ஆர்.பி தேர்வில் தொழில்நுட்பக் கோளாறால், தேர்வெழுத முடியாதவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதுகலை கணினி ஆசிரியர் நிலை -1க்கு, கணினி வழியில் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

முதல்முறையாக கணினி வழியில் நடத்தப்பட்ட இத்தேர்வு, பெரும்பாலான மையங்களில் எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்றது. எனினும் ஒரு சில மையங்களில் ஓரிரு ஆய்வகங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால், சில தேர்வர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்வு மையத்துக்கு வருகை புரிந்து கணினி தொழில்நுட்பக் கோளாறால் தேர்வில் பங்கேற்காதவர்கள், தேர்வினை நிறைவு செய்யாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும்.

எனவே இத்தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அச்சப்படத் தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள், மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் விரைவில் தெரிவிக்கப்படும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here