சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு – நிர்வாகிகள் கூட்டத்தில் எதிராக தீர்மானம்

0
422
dmk news

சாத்தான்குளம், ஜூலை 17.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொருப்பாளர் நியமிக்கப்பட்டதற்கு அப்பகுதியைச் சேர்ந்த திமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து மாற்ற வலியுறுத்தியுள்ளனர்.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதன் அடிப்படையில் சாத்தான்குளம் ஒன்றியம் ஒருங்கிணைந்த திமுகவில் வைக்கப்பட்டு ஒன்றிய செயலராக ஏ.எஸ் .ஜோசப் இருந்து வந்தார். இந்நிலையில் கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு சாத்தான்குளம் ஒன்றியத்தை தெற்கு , வடக்கு என திமுக தலைமை பிரித்தது. வடக்கு ஒன்றியத்தி்ல 13 ஊராட்சி பகுதி மற்றும் பேருராட்சி பகுதியும் உள்ளது. பிரிக்கப்பட்ட தெற்கு ஒன்றியத்தில் 11 ஊராட்சிபகுதிகளை உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வடக்கு ஒன்றிய செயலராக ஏ. எஸ். ஜோசப் அறிவிக்கப்பட்டார். தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வக்குமார் நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு தெற்கு ஒன்றிய திமுக வினரிடையே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வக்குமார் கட்சி பணியில் எதிலும் இதுவரை ஈடுப்படாதவர் என குற்றச்சாட்டு தெரிவித்து அவரை மாற்ற வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தெற்கு மாவட்டத்தில் சில புகாரின் அடிப்படையில் திமுக முதன்மை செயலர் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த 3ஆம்தேதி வருகை தந்தார். இதனையறிந்த சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் நேருவிடம் செல்லிடபேசி வழியாக புகார் தெரிவித்தனர். அவர் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவரும் கட்சி தலைமைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் புகார் தெரிவிக்கப்பட்டு 15 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் கட்சி தலைமையில் இருந்து எடுக்கப்படாததால் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரத்தில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ஏ.இந்திராகாசி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ். பசுபதி முன்னிலை வகித்தார். பனைவிளை ஊராட்சி செயலர் ராஜபாண்டி வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலர்கள் ஆ. பாலமுருகன், சக்திவேல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வேந்திரன், ஊராட்சி செயலர்கள் சித்திரை, முருகேசன், ஜெயராமன், ஜெயராமசந்திரன், ஜாண்சன், ரத்தினராஜ், ஜெகநாதன், டேவிட் வேதராஜ், உள்ளிட்ட 11 ஊராட்சி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் கட்சியில் அறிமுகம் இல்லாத , கட்சியில் தொடர்பில்லாத நபரை புதிய ஒன்றிய பொறுப்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதனை கவனித்து தெற்கு ஒன்றிய பகுதியில் கட்சியில் அனுபவமுள்ள , கட்சியினரோடு தொடர்புடையவரை ஒன்றிய பொறுப்பாளராக உடனடியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி , அனைவரும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here