சாத்தான்குளம் அருகே சமையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

0
59
sathai

சாத்தான்குளம், ஜூலை 19-

சாத்தான்குளம் அருகே சமையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்தார்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வாகைநேரி கிராமத்தை சேர்ந்தவர் சுடலை(50) சமையல் தொழிலாளி. இவரது மனைவி கந்தம்மாள்(43). இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு மகன் உள்ளூரில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் மும்பையில் இட்லி வியாபாரம் செய்துவந்த நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது ஊருக்கு வந்துள்ளார்.

இதனிடையே சுடலை, அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மகன்கள் இருவரும், அனைவரிடம் சகஜமாக பேசிவந்ததால் எனக்கு பிடிக்காதவர் களிடம் நீங்கள் எப்படி பேசலாம் என தனது மகன்களிடம் சுடலை கண்டித்துள்ளார். ஆனால் மகன்கள் கண்டுகொள்ளவில்லையாம்.

இதனால் மனமுடைந்த சுடலை, கடந்த 17ம்தேதி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் எஸ்.ஐ. முத்துசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here