சாத்தான்குளம் அருகே கறுப்பர் கூட்டத்தை கண்டித்து வீடுகளில் கறுப்பு கொடி

0
126
sathai news

சாத்தான்குளம், ஜூலை 19-

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர்கூட்டம் இயக்கம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தான்குளம் அருகே வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் இயக்க நிர்வாகி நடராஜன் மற்றும் தொலைக்காட்சி உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே அவதூறுக்கு தூண்டுதலாக இருந்த மற்றவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பாஜ சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதன்படி கறுப்பர்கூட்டம் இயக்க நிர்வாகிகள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாத்தான்குளம் அருகே பூவுடையார்புரத்தில் வீடுகளில் இன்று கறுப்பு கொடி ஏற்றப்பட்டன. நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here