தூத்துக்குடியில் தினசரி 2 ஆயிரம் பேரிடம் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை – மாவட்ட கலெக்டர் தகவல்

0
335
thoothukudi collector

தூத்துக்குடியில் தினசரி இரண்டாயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பதற்காக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை இன்று பல்வேறு பகுதிகளில் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர், ‘’தொற்று பரவல் அதிகமாக ஏற்படும் பகுதியில் தொற்று ஏற்படாதவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்வதற்காக 12 இடங்களில் பரிசோதனை மையம் அம்மைக்கப்பட்டுள்ளன, இந்த பரிசோதனை மையங்கள் தினசரி காலை முதல் மாலை வரை செயல்படும்.

சளி தொந்தரவு, காய்ச்சல் லேசான அறிகுறி உள்ளவர்களும் இந்த பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொள்ளலாம். தூத்துக்குடி உழவர் சந்தை பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் 150 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அதில் 21 மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

எனவே கடந்த 5 தினங்களாக அந்த சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் தங்களுக்கு ஏதாவது சிறிய அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையங்கள் மூலமாக தங்களது பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏற்கனவே 800 படுக்கைகள் தயாராக உள்ளன. மேலும் கூடுதலாக 800 படுக்கைகள் அதேபோல் கோவில்பட்டியில் கூடுதலாக 100 படுக்கைகள் திருச்செந்தூரில் கூடுதலாக 150 படுக்கை வசதிகளும் செய்யப்பட உள்ளது.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் தினசரி 1300 முதல் 1400 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்திற்குள் தினசரி 2000 பேருடைய மாதிரிகள் பரிசோதனை தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். தூத்துக்குடியில் 52 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விளாத்திகுளம், திருச்செந்தூர் , கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி சந்தை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக பேருக்கு தொற்று ஏற்படுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இந்த மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளில் தொற்று பரவி வரும் அந்த பகுதிகளில் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார் கலெக்டர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here