நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் விழா!

0
534
nazareth news

நாசரேத்,நவ.23:நாசரேத் சாலமோன் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளிதாளாளர் ஜமீன்சாலமோன் தலைமை தாங்கினார்.பள்ளி தலைவர் சத்தியவதி மனோகரன் வரவேற்று பேசினார். பள்ளிமுதல்வர் அனிஜெரால்டு முன்னிலை வகித்தார்.

பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளுக்கு எடுத்துரைத் தார். பள்ளி உதவி முதல்வர் மகிலா சரவணன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி குழந்தைகள் மறைந்த பாரதபிரதமர் இந்திரா காந்தியின் வேடமணிந்து வந்திருந்தனர்.

இந்திரா காந்தி அம்மை யாரைப்பற்றி குழந்தைகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது.குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, பேச்சு போட்டி மற்றும் மாறுவேட போட்டியில் வெற்றி பெற்றவர்க்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட் டது. விழா ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here