கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை கூட்டமைப்பின் துவக்க விழா

0
24
kvp news

கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் 2019-20 கல்வியாண்டிற்கான மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை கூட்டமைப்பின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை கூட்டமைப்பின் செயலாளர் நான்காம் ஆண்டு மாணவர் எ.டேவிட் ராஜ்குமார் வரவேற்றார். தொடக்க விழாவிற்கு கல்லூரி இயக்குனர் முனைவர். எஸ்.சண்முகவேல் தலைமை வகித்தார். சென்னை, எம்.பிட் வயர்லெஸ் பிரைவேட் லிமிடெட்டின் சீனியர் ஸ்டாப் என்ஜினீயரும்,

கல்லூரியின் முன்னாள் மாணவருமான எம்.சின்ன தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளைப் பற்றி விரிவாகக் கூறினார்,

மேலும் அனைத்து மாணவர்களையும் கடினமாக உழைத்து சிறந்து விளங்குமாறு கேட்டுக்கொண்டார். கல்லூரி நாட்களில் மாணவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை புதுமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மூன்றாம் ஆண்டு மாணவிகள் எஸ்.சசிரேகா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். எ.ரோனிஷா சலோமி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

ஆர்.ரோஷினி நன்றியுரை ஆற்றினார்.விழாவின் ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் முனைவர் எ.செண்பகவள்ளி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை பேராசிரியர் எஸ். கார்த்திகா மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here