நெல்லை மாவட்ட பாஜக பிரமுகருக்கு கொலை மிரட்டல் – சகோதரர்கள் மீது வழக்கு

0
274
bjp news

சாத்தான்குளம், ஜூலை 25:

பேய்க்குளத்தில திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதர்கள் மீது போலீஸார் வழக்குபதிந்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள தெற்குபேய்க்குளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் தடிக்காரன் (எ) எல்.டி.தாஸ் (27). இவர் வழக்குரைஞராக படித்து அவரது தந்தையுடன் இருந்து வருகிறார். திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது செல்லிடபேசிக்கு அதே ஊரைச் சேர்ந்த சங்கரன் மகன் வீரமுருகபெருமாள் அவர் செல்பேசியில் இருந்து கல்வி நிறுவனம் தொடர்பான குறுஞ்தகவல் வந்ததாம். அவர் உடன் வீரமுருகபெருமாளுக்கு செல்லிடபேசியில் பேசியுள்ளார்.

அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீரமுருகபெருமாள், அவரது தம்பி சண்முகவேல் ஆகியோர் இரும்பு கம்பியுடன் எஸ்.டி.தால் வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம். இதுகுறித்து எல்.டி.தாஸ் சாத்தான்குளம் காவல் நிலையத்தி்ல அளித்துள்ள புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் வழக்குபதிந்து தலைமறைவான அண்ணன், தம்பியை தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here