பேய்க்குளம் மகேந்திரன் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிடவேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

0
236
maherndran news

தூத்துக்குடி, ஜூலை.27:

போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த தொழிலாளி மகேந்திரன் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ”சாத்தான்குளம் தாலுகா பேய்குளத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் மகேந்திரனை கடந்த மே மாதம் 24ம் தேதி சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி மகேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். மகேந்திரன் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று அவரது தாயார் வடிவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தற்போது சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது.

இத்தகையசூழ்நிலையில், மிகவும் வறுமை நிலையிலுள்ள மகேந்திரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.10லட்சம் நிவாரணத்தொகை வழங்கிடவேண்டும், அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவேண்டும்.

மேலும், கடந்த நான்கு மாதங்களில் சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்து பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிடவேண்டும். மேலும், சாத்தான்குளம் காவல்நிலைய மரணங்கள் தொடர்பான விசாரணையில் சாட்சி அளித்துவரும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பினை அரசு வழங்கிடவேண்டும்’’ என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here